/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மரக்கன்று நடவு செய்த மாணவர்கள்

ADDED : டிச 19, 2025 05:20 AM

ஊட்டி: ஊட்டி நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில், நஞ்சநாடு, கக்கன்ஜி நகர், கப்பத்தொரை மற்றும் முத்தோரை பாலாடா பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியில், சுற்றுச்சூழல், துாய்மை பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, தனியார் அமைப்பு சார்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நாட்டு நல பணி திட்டம் முதன்மை அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மேலாளர் பாலகிருஷ்ணன் உட்பட, பலர் பங்கேற்றனர்.