/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டை உடைக்கும் ஒற்றை யானையால் அச்சம்
/
வீட்டை உடைக்கும் ஒற்றை யானையால் அச்சம்
ADDED : டிச 19, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: குன்னுார் கோடேரி மானாடா பகுதியில் வீடுகளை உடைக்கும் ஒற்றை யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குன்னுார் அருகே கோடேரி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் இங்குள்ள கர்ணன் என்பவரின் வீட்டை உடைத்ததுடன், தோட்டத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இங்குள்ள மயில் என்பவரின் வீட்டின் அருகேயும் வந்து நின்றது. எனவே, ஒற்றை யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

