/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பா.ஜ., சார்பில் பயிலரங்கம் நிர்வாகிகள் பங்கேற்பு
/
பா.ஜ., சார்பில் பயிலரங்கம் நிர்வாகிகள் பங்கேற்பு
பா.ஜ., சார்பில் பயிலரங்கம் நிர்வாகிகள் பங்கேற்பு
பா.ஜ., சார்பில் பயிலரங்கம் நிர்வாகிகள் பங்கேற்பு
ADDED : டிச 19, 2025 05:19 AM
கூடலுார்: கூடலுாரில் பா.ஜ., சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நடந்த பயிலரங்கில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூடலுார் ஸ்ரீமதுரை கம்மாத்தியில், தனியார் அரங்கில் பா.ஜ., சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்தது. சட்ட மன்ற அமைப்பாளர் நளினி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் தர்மன் தலைமை வகித்தார். தமிழ் இலக்கிய மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் கோபால் பயிலரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில்,'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகளில், கண்காணிக்கப்பட வேண்டிய தகவல்கள், விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்து பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட பொது செயலாளர் பாபு, தாயம்மா, மாவட்ட துணைத் தலைவர்கள் அருண், திவாகரன், மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணன், தொகுதி பார்வையாளர் சவுந்தர்ய பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மண்டல தலைவர் சுதாகரன் நன்றி கூறினார்.

