/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் பாதுகாப்பு; மாணவர்கள் உறுதிமொழி
/
யானைகள் பாதுகாப்பு; மாணவர்கள் உறுதிமொழி
ADDED : ஆக 12, 2025 07:41 PM

கூடலுார்,; கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில் நடந்த, உலக யானைகள் தின விழாவில், யானைகள் பாதுகாப்பு குறித்து வன ஊழியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், உலக யானைகள் தின விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, ஜீன்பூல் நுழைவு வாயில் அருகே பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்துக்கு, வனச்சரகர் ரவி தலைமை வைத்தார்.
ஊர்வலத்தில் பங்கேற்ற, புளியம்பாறை, பொன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், யானைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
ஜீன்பூல் தாவர மையம் சாலை வழியாக சென்ற ஊர்வலம் வளாகத்தில் நிறைவு பெற்றது. அங்கு நடந்த விழாவில், 'காடுகள், யானைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம்,' குறித்து வனச்சரகர் ரவி மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து வன ஊழியர்கள், மாணவர்கள் யானைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
விழாவில், புலியாம்பாறை அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், வனக் காப்பாளர் தம்பா, வன ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

