/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது; கல்வியில் நாட்டம் செலுத்த அறிவுரை
/
மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது; கல்வியில் நாட்டம் செலுத்த அறிவுரை
மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது; கல்வியில் நாட்டம் செலுத்த அறிவுரை
மாணவர்கள் படிப்பை நிறுத்தக்கூடாது; கல்வியில் நாட்டம் செலுத்த அறிவுரை
ADDED : செப் 15, 2025 08:57 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே, தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி சார்பில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தனபாலன் தலைமை வகித்து பேசுகையில், ''அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் நிலையில், சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்திய போது, மாணவர்களுக்கு குடிநீர் காய்ச்சி வழங்கப்பட்டது.
அப்போது பள்ளி நிர்வாகம், கேட்டு கொண்டதைத் தொடர்ந்து கல்லுாரியில் துவங்கிய ராஜேந்திர சுவாமியின்,110-வது ஜெயந்தியை முன்னிட்டு, முன்னாள் மாணவர் கார்த்திகேயன் என்பவர் சார்பில், 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பள்ளிக்கல்வி நிறைவு செய்த பின்னர், கட்டணம் செலுத்த வழியில்லை என்று கூறி படிப்பை நிறுத்த கூடாது. தொடர்ந்து படிக்க எங்களது கல்லுாரி சார்பில் உரிய வழிகாட்டல் மற்றும் உதவிகள் செய்யப்படும்,''என்றார்.
நிகழ்ச்சியில், முனைவர்கள் பாபு, கணேஷ், வடிவேலன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.