/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேற்கூரை இல்லாததால் வெயிலில் அவதி
/
மேற்கூரை இல்லாததால் வெயிலில் அவதி
ADDED : ஜன 29, 2024 11:53 PM

ஊட்டி;'அரசு மருத்துவமனை வளாகத்தில் மேற்கூரை வசதிகளுடன் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளாக பலர் சிகிச்சை பெறுகின்றனர். புறநோயாளிகளாக சிகிச்சை பெறவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தவிர, சிகிச்சை பெறுபவர்களை பார்க்க உறவினர்களும் வந்து செல்கின்றனர்.
மருத்துவமனை முன்பு மருத்துவமனைக்கு வருபவர்கள் அமர போதிய இருக்கைகள் இல்லை. குறைந்த அளவில் உள்ள இருக்கையில் இருக்கமாக அமர வேண்டிய நிலை உள்ளது. மேற்கூரை வசதி இல்லாததால் கைக் குழந்தைகள், முதியோர் சுட்டெரிக்கும் வெயிலில் சிரமப்பட்டு அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மேற்கூரை வசதிகளுடன் இருக்கை வசதி அமைக்க வேண்டும்,' என்றனர்.