/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பில்லாத குடியிருப்புகளால் அவதி
/
பராமரிப்பில்லாத குடியிருப்புகளால் அவதி
ADDED : ஜன 05, 2024 11:32 PM

குன்னுார்;குன்னுார், 25வது வார்டுக்கு உட்பட்ட 'ஹேர்வுட்' குடியிருப்பு பகுதியில் வருவாய் துறை ஊழியர்களின், 60 குடும்பங்கள் உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் பெரும்பாலும் மண் சுவர்களாக உள்ளன. பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து காட்டெருமை, கரடி மற்றும் பாம்பு உட்பட விஷ பூச்சிக்களின் புகழிடமாக மாறியுள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் தீயணைப்பு நிலையம் அருகில் இருந்து செல்லும் நடைபாதையில் மண்சரிவு ஏற்பட்டு மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதில், சில குடியிருப்புகள் முழுவதும் புதர்களால் மூடி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
குடியிருப்புவாசிகள் கூறுகையில்,'நகராட்சி சார்பில் பெயரளவிற்கு துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நடைபாதை முழுவதும் பாசி படர்ந்து வழுக்கி பலரும் விழுந்து காயமடைகின்றனர். வீடுகளுக்குள் விஷ பூச்சிகளும், பாம்புகளும் வருவது வாடிக்கையாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.