UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி நகரின் பல இடங்களில், பாதாள சாக்கடை அடைபட்டு கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மக்கள் அவதிப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பல முறை நகராட்சியில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நகராட்சி அதிகாரிகள் நகராட்சி வார்டு பகுதிகளில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட கழிவு நீர் தொட்டிகள்; குழாய்களை மாற்றி மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
