/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சல்லிவன் நினைவு மையம் புறக்கணிப்பு; நீலகிரி ஆவண காப்பக மையம் குற்றச்சாட்டு
/
சல்லிவன் நினைவு மையம் புறக்கணிப்பு; நீலகிரி ஆவண காப்பக மையம் குற்றச்சாட்டு
சல்லிவன் நினைவு மையம் புறக்கணிப்பு; நீலகிரி ஆவண காப்பக மையம் குற்றச்சாட்டு
சல்லிவன் நினைவு மையம் புறக்கணிப்பு; நீலகிரி ஆவண காப்பக மையம் குற்றச்சாட்டு
ADDED : ஆக 07, 2025 09:00 PM

கோத்தகிரி; கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ள ஜான் சல்லிவன் மையம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக, புகார் எழுந்துள்ளது.
நீலகிரி ஆவண காப்பக மைய இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கடந்த, 2002ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் சுப்ரியா சாகு, சேதம் அடைந்த சல்லிவன் நினைவகத்தை பழமை மாறாமல் புதுபிக்க நடவடிக்கை எடுத்தார். அன்பின் பராமரிப்பு இல்லாமல் இந்த நினைவகம் பொலிவிழந்து காணப்பட்டது.
இதை தொடர்ந்து, 2010ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், பொதுப்பணித்துறை மற்றும் நீலகிரி ஆவண காப்பகத்தின் முயற்சியால் பொலிவுப்படுத்தப்பட்டது.
தேக்கு மரத்தில் செதுக்கப்பட்ட பெயர் பலகை, சென்னையில் தயார் செய்யப்பட்டது. இந்த நினைவுச் சின்னத்தை, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குனர் கிறிஸ் கிப்சன், அப்போதைய கலெக்டர் ஆனந்தராவ் பட்டில், எச்.ஏ.டி.பி., இயக்குனர் சமயமூர்த்தி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் திறந்து வைத்தனர்.
தற்போது, மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் மற்றும் நினைவு சின்னங்களை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனினும், ஜான் சல்லிவன் நினைவு மையம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவு சின்னத்தை மாவட்ட நிர்வாகம் பராமரிக்க முடியாத பட்சத்தில், அரசு சார் நிறுவனத்திடம் ஒப்படைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.