/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை மழை வரம்; இலை வரத்து அதிகம்: மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
/
கோடை மழை வரம்; இலை வரத்து அதிகம்: மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
கோடை மழை வரம்; இலை வரத்து அதிகம்: மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
கோடை மழை வரம்; இலை வரத்து அதிகம்: மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
ADDED : ஏப் 03, 2025 08:35 PM

மஞ்சூர்:
கோடை மழையால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் இலை வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில், கிண்ணக்கொரை, பிக்கட்டி எடக்காடு, மேற்கு நாடு, கைகாட்டி, இத்தலார் உள்ளிட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும், 50க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு டிச., மாதத்திலிருந்து ஏற்பட்ட பனி பொழிவால் தேயிலை வரத்து படிப்படியாக குறைந்தது. தினசரி அதிகபட்சம் 5000 கிலோ முதல் 8000 கிலோ வரை கொள்முதல் செய்யப்பட்டது. தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்தியும் படிப்படியாக குறைந்தது. கூட்டுறவு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டது.
மழையால் மகிழ்ச்சி
இந்நிலையில், தற்போது கோடை மழை பரவலாக பெய்தது. தேயிலை தோட்டங்களை உரமிட்டு பராமரிக்க ஏற்ற ஈரப்பதம் கிடைத்தது. இலைகள் துளிர் விட ஆரம்பித்தது.
பகல் நேரங்களில் வெயில் தென்பட்டதால் சில பகுதிகளில் பசுந்தேயிலை அறுவடைக்கு தயாரானது. கடந்த ஒரு வாரமாக குறிப்பாக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தினசரி, 10 ஆயிரம் கிலோ முதல், 15 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
தினசரி மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில் தேயிலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், குன்னுார், காட்டேரி உட்பட சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்ததால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிகபட்ச மழை பதிவு
கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவுமழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரம் படி, கீழ்கோத்தகிரி பகுதியில், மாவட்டத்தில் அதிக பட்சமாக, 30 மி.மீ., மழையும், கோடநாடு பகுதியில், 15 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. வானம் மேகமூட்டமாக தொடர்ந்து வருவதால், எதிர் வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

