/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புறநகர் பகுதியில் தென்படாத கோடை மழை; 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

ADDED : மார் 31, 2025 09:40 PM

ஊட்டி; ஊட்டி அருகே, ஆடாசோலை சுற்று வட்டார பகுதியில் கோடை மழை தென்படாததால் ஸ்பிரிங்ளர் உதவியுடன் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
ஊட்டி அடுத்துள்ள ஆடாசோலை, தேனாடு கம்பை, கடநாடு, அணிக்கொரை, எப்பநாடு சுற்று வட்டாரத்தில் மலை காய்கறி விவசாயம் பல ஏக்கரில் பயிரிடப்படுகிறது. நடப்பாண்டில் முதல் போக விவசாயத்திற்காக விவசாயிகள் பல ஏக்கரில் விதைப்பு பணி மேற்கொண்டனர். நிலங்களில் களை எடுப்பு , தண்ணீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி நகர் உட்பட பிற இடங்களில் கோடை மழை அவ்வப்போது பெய்தது. மேற்கண்ட பகுதிகளில் கோடை மழை பெய்யவில்லை. விவசாயிகள் விளை நிலங்களில் ஸ்பிரிங்ளர் உதவியுடன் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் அதிகளவில் விவசாயம் மேற்கொண்டு வருகிறோம். கோடை மழை மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்துள்ள நிலையில், எங்கள் பகுதியில் பெய்யவில்லை.
ஸ்பிரிங்ளர் உதவியுடன் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இனிவரும் நாட்களில் கோடை மழை தென்பட்டால் விவசாய பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் மழையை எதிர்பார்த்துள்ளோம்,' என்றனர்.