/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடைகால சிறப்பு கணித முகாம் அரிய தகவல்கள் பரிமாற்றம்
/
கோடைகால சிறப்பு கணித முகாம் அரிய தகவல்கள் பரிமாற்றம்
கோடைகால சிறப்பு கணித முகாம் அரிய தகவல்கள் பரிமாற்றம்
கோடைகால சிறப்பு கணித முகாம் அரிய தகவல்கள் பரிமாற்றம்
ADDED : ஏப் 24, 2025 10:53 PM

ஊட்டி,; ஊட்டி காந்தள் பகுதியில் அமைந்துள்ள அறிவு சார் மையத்தில், கோடைகால சிறப்பு கணித முகாம் நடந்தது.
பொதுநல மருத்துவர் ஈஷா தலைமை வகித்து பேசுகையில், ''அறிவு சார் மையத்தில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கு, சிறப்பான முறையில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது மாணவர்களும், போட்டி தேர்வாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க, மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ, 'இனிக்கும் கணிதம்' என்ற தலைப்பில் பேசியதாவது:
அறிவியலின் இளவரசி என கூறப்படும் கணிதம் இல்லாமல், எந்த அறிவியல் துறையும் செயல்படாது. இந்தியாவின் தலைசிறந்த கணித மேதை ராமானுஜம், தன்னுடைய, 34 ஆண்டு வாழ்நாளில், 3,900 புதிய கணித சமன்பாடுகளை கண்டறிந்துள்ளார்.
அவர் எழுதி வைத்துள்ள குறிப்புகள், இன்றளவும் ஆராய்ச்சி பொருளாக அமைந்துள்ளது. அவர் கண்டுபிடித்த தீட்டா என்ற தேற்றம் இன்று நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம்.,களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
மற்றொரு கணித மேதை சகுந்தலா தேவி, தன்னுடைய, 12வது வயதில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது,  இரண்டு, 13 இலக்க எண்களை மனதுக்குள் பெருக்கி, 26 வினாடிகளில் விடை கூறி சாதனை படைத்துள்ளார். இன்றளவும், அது உலக சாதனையாக திகழ்கிறது.
கணித மேதை ஆலன் டூரிங் கண்டுபிடித்த கணித சமன்பாடுதான், இன்றைய அனைத்து கம்ப்யூட்டர்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. யூலர் என்ற கணித மேதை தனது, மூன்று வயதில், ஒன்றில் இருந்து, நுாறு வரை கூடுதல் காணும் எளிய முறையை கண்டறிந்து சாதனை படைத்துள்ளார்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பெபி நோக்கி என்ற கணித அறிஞர் கணித தொடரை கண்டறிந்தார். சூரியகாந்தி பூக்களின் இதழ்கள், இந்த கணித தொடர் வரிசையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கணித தொடரின், இரண்டு எண்களுக்கு இடையே உள்ள விகிதம் தங்க விகிதம் எனப்படுகிறது. நமது முகம் கூட, தங்க வீதத்தில் அமைந்துள்ளது அதிசயமாகும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, மென்டல் அரித்மெட்டிக் எனப்படும் பேனா, நோட்டு புத்தகம்  இல்லாமல், மூன்று இலக்கம் வரையில் உள்ள எண்களை பெருக்கும் எளிய முறைகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.  முன்னதாக, நுாலகர் அசீனாபி வரவேற்றார். போட்டி தேர்வுக்கான ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

