/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணைகளில் மூன்றாவது நாளாக உபரி நீர் வெளியேற்றம்
/
அணைகளில் மூன்றாவது நாளாக உபரி நீர் வெளியேற்றம்
ADDED : ஜூலை 29, 2025 07:59 PM

ஊட்டி; நீலகிரியில் மூன்றாவது நாளாக அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு, நேற்று மாலை நிறுத்தப்பட்டது.
ஊட்டி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நீரோடைகளில் வழக்கத்தை விட நீர் வரத்து அதிகரித்துள்ளது. குந்தா, பைக்காரா நீர் மின் வட்டத்திற்கு உட்பட்ட நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், 13 அணைகளில், 30க்கு மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளன.
அதில், அப்பர்பவானி, குந்தா, அவலாஞ்சி, பைக்காரா, முக்கூர்த்தி உட்பட பல அணைகள் முழு கொள்ளளவை எட்டின. அணைகளின் பாதுகாப்பு கருதி மூன்றாவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு, நேற்று மாலை நிறுத்தப்பட்டது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'பரவலாக பெய்து வரும் மழைக்கு குந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, பைக்காரா, முக்கூர்த்தி உள்ளிட்ட அணைகள் மூன்றாவது நாளாக திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மழை சற்று குறைந்ததால் இன்று (நேற்று) மாலை உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது,' என்றனர்.

