/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துாய்மை பாரதம் விழிப்புணர்வு பேரணி; பாஸ்டியர் நிறுவன ஊழியர்கள் பங்கேற்பு

ADDED : செப் 25, 2025 11:32 PM

குன்னுார்; குன்னுார் பாஸ்டியர் நிறுவனம் சார்பில், தூய்மையே பாரதம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குன்னுாரில் உள்ள மத்திய அரசின் பாஸ்டியர் நிறுவனம் சார்பில், துாய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த, 17ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. நேற்று குன்னுார், சிம்ஸ் பார்க்கில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி, மவுண்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக தீயணைப்பு நிலைய வளாகத்தை அடைந்தது. 'துாய்மையே சேவை, துாய்மையான பாரதம்' போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.
பேரணியை துவக்கி வைத்த, நிறுவன இயக்குனர் டாக்டர் சிவக்குமார் பேசுகையில், ''பொது இடங்களை துாய்மையாக வைத்து கொள்வது அனைவரின் கடமை. துாய்மையே பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வரும், 30ம் தேதி மலைபாதை பகுதிகளில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.
இணை இயக்குநர் டாக்டர் பிரேம்குமார், நிர்வாக அதிகாரி வைர மூர்த்தி, அதிகாரிகள் உட்பட நுாற்றுகணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் ஜெகநாதன் நன்றி கூறினார்.