/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம்
/
தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம்
ADDED : ஆக 01, 2025 07:40 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் தையல் கலைஞர்கள் சங்க (சி.ஐ.டி.யூ) மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் வாசு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் வர்கீஸ், ராஜன், இளைஞர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன், வக்கீல் குயிலரசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
தொடர்ந்து, சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், தலைவராக வாசு செயலாளர்களாக மகேஷ், சுதா, பொருளாளராக முருகன் ஆகியோருடன், 11 மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில், 'மாவட்டத்தில் இருந்து, மாற்றப்பட்ட தொழிலாளர் நல அலுவலகத்தை, மீண்டும் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்; தையல் கலைஞர்களுக்கு வங்கிகள் சார்பாக, கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தையல் கலைஞர்களுக்கு, உதவித்தொகையை, 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைக்கான பிரிவுகளை முறையாக செயல்படுத்தி, நவீன சிகிச்சை அளிக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தையல் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். சி.ஐ. டி.யூ., மாவட்ட செயலாளர் வினோத் பாலன் நன்றி கூறினார்.