/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நோய் இல்லாத வாழ்வு வாழ 'ஆர்கானிக்' விவசாயம் மேற்கொள்ளுங்கள் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு
/
நோய் இல்லாத வாழ்வு வாழ 'ஆர்கானிக்' விவசாயம் மேற்கொள்ளுங்கள் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு
நோய் இல்லாத வாழ்வு வாழ 'ஆர்கானிக்' விவசாயம் மேற்கொள்ளுங்கள் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு
நோய் இல்லாத வாழ்வு வாழ 'ஆர்கானிக்' விவசாயம் மேற்கொள்ளுங்கள் விவசாயிகளுக்கு தோட்டக்கலை அழைப்பு
ADDED : பிப் 22, 2024 11:33 PM

குன்னூர்:இயற்கை உரங்களை பயன்படுத்தி தயாரிக்கும் நஞ்சில்லாத ஆர்கானிக் விளை பொருட்கள் விளைவிக்க விவசாயிகள் முன்வர வேண்டும். என தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.
குன்னூர் உபாசி அரங்கில், நீலகிரி தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆர்கானிக் வேளாண்மை கருத்தரங்கு நேற்று நடந்தது.
தேயிலை வாரிய இணை இயக்குனர் பர்குனி பானர்ஜி தலைமை வகித்து, பேசுகையில், ரசாயன உரங்கள் பயன்படுத்தி விளைவிக்கும் விளை பொருட்கள் பயன்படுத்துவதால் நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. 'ஆர்கானிக்' முறையில் இயற்கை உரங்கள் பயன்படுத்தி, விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் மிகவும் தரம் வாய்ந்ததாக உள்ளது. விவசாயிகள் அதிகளவில் 'ஆர்கானிக்' முறையில் விவசாய சாகுபடி செய்ய முன் வர வேண்டும். இந்த விளை பொருட்களால் நோயற்ற வாழ்வு வாழ முக்கிய காரணமாக அமையும். என்றார்.
இயற்கை உரம் அவசியம்
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி பேசுகையில், நீலகிரியில், ரசாயன உரங்கள் மூலம் அதிக விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. புற்றுநோய், நீரழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளதால், இவை தடுக்கப்பட வேண்டும். 70 வயதில் வரும் நோய்கள் தற்போது 30 வயதிலேயே வருகிறது. இயற்கை உரங்களை பயன்படுத்தி தயாரிக்கும் நஞ்சில்லாத 'ஆர்கானிக்' விளை பொருட்கள் விளைவிக்க விவசாயிகள் அதிகளவில் முன்வர வேண்டும். 'ஆர்கானிக்' பொருட்களை பயன்படுத்தி மக்கள் நோய் இல்லாத வாழ்வு வாழலாம். மண் மாசுபடுவதும் தடுக்கப்படும். என்றார்.
செயல் விளக்கம்
விவசாயிகளுக்கு இலவச பழ நாற்றுக்கள் நீர் தெளிப்பான் கருவிகள் வழங்கப்பட்டது.
இயற்கை முறையில், தயாரிக்கப்பட்ட காய்கறி, கீரை, பயிர் வகைகள், வாசனை திரவியங்கள், மூலிகைகள், இயற்கை உரங்களை 'ஆர்கானிக்' விவசாயிகள் வைத்த கண்காட்சியில், நூற்றுகணக்கான விளை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் ஊக்குவிப்பு, விவசாயம் மேற்கொள்ளும் வழிமுறைகள், விற்பனை வசதிகள் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.