/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தலைகுந்தா சாலையோரம் கழிவுகளை வீசுவதால் பாதிப்பு
/
தலைகுந்தா சாலையோரம் கழிவுகளை வீசுவதால் பாதிப்பு
ADDED : நவ 08, 2024 10:45 PM

ஊட்டி ; ஊட்டி தலைகுந்தா அருகே சுற்றுலாப் பயணிகள் உணவு கழிவுகளை வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி -கூடலுார் சாலையில் தலைகுந்தா பகுதி அமைந்துள்ளது. இவ்வழியாக, கர்நாடகா, கேரளா வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. சுற்றுலா வருபவர்கள் தலைகுந்தா அருகே, வாகனங்களை நிறுத்தி சிற்றுண்டி உணவு உட்கொள்வது வழக்கம். மேலும், வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை சாலையோர திட்டில் அமர்ந்து, உண்பது தொடர்கிறது.
உணவு உட்கொண்ட பின், தட்டு மற்றும் டம்ளர்கள் உட்பட, பிளாஸ்டிக் கழிவுகளை அப்பகுதியில் வீசி வருகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவு கழிவுகளை அவை உண்பதால், உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்.