/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு பந்தலுாரில் முகாம்
/
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு பந்தலுாரில் முகாம்
ADDED : ஆக 29, 2025 09:17 PM

பந்தலுார்; பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில், மழையால் ஏற்படும் பேரிடரை எதிர் கொள்ளும் வகையில், தமிழ்நாடு பேரிடர் குழுவை சேர்ந்த, 40 பேர் தயார் நிலையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தேவாலா வாழவயல் பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சந்திரிகா,45, என்பவர் மீட்கப்பட்டு காயங்களுடன், ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மேலும், பந்தலுார் சுற்று வட்டார பகுதி சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
பந்தலுார் ஹட்டி பகுதியில், சுரேஷ் என்பவரின் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. மழையால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டால் எதிர் கொள்ளும் வகையில், தமிழ்நாடு பேரிடர் மேற்கு குழுவை சேர்ந்த, சப்---இன்ஸ்பெக்டர் பாலகுமார், தலைமை காவலர் ஷேக் அசைன் ஆகியோர் தலைமையில், 40 பேர் கொண்ட குழுவினர், பாதுகாப்பு உபகரனங்களுடன் முகாமிட்டு உள்ளனர்.
அதில், 20 பேர் பந்தலுாரிலும், 20 பேர் கூடலுார் தாசில்தார் அலுவலகங்களில் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர்.
வருவாய் துறையினர் கூறுகையில், 'பொதுமக்களுக்கு மழையால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால், உடனடியாக அந்தந்த பகுதியில் முகாமிட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.