/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜனாதிபதியை வரவேற்க தமிழக கவர்னர் ஊட்டி வந்தார்
/
ஜனாதிபதியை வரவேற்க தமிழக கவர்னர் ஊட்டி வந்தார்
ADDED : நவ 26, 2024 10:28 PM
ஊட்டி:ஊட்டிக்கு வரும் ஜனாதிபதியை வரவேற்க தமிழக கவர்னர் ரவி ஊட்டி வந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ஊட்டி வந்து ராஜ்பவனில் தங்குகிறார்.
28ம் தேதி சாலை மார்க்கமாக குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்கு நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
29ம் தேதி வரை ஊட்டி ராஜ் பவனில் தங்கும் ஜனாதிபதி 30ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
ஊட்டிக்கு வரும் ஜனாதிபதியை தமிழக கவர்னர் ரவி வரவேற்க இருப்பதால், இரவு, 9:15 மணிக்கு தமிழக கவர்னர் ரவி ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். கவர்னரை நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா புத்தகம் கொடுத்து வரவேற்றார்.