ADDED : டிச 18, 2024 08:33 PM
அ நிறம் | அளவு
ஊட்டி; நீலகிரியில் தமிழ் புதல்வன் திட்டத்தில், 1,556 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும், தமிழ் புதல்வன் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது.
இத்திட்டத்தில், நீலகிரியில், 6 முதல் 8ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நீலகிரியில் இருந்து, 15 கல்லுாரிகளை சேர்ந்துள்ள, 1,556 மாணவர்கள் மாதந்தோறும், 1000 வீதம், 15.56 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
