/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழ் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டம்
/
தமிழ் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : நவ 10, 2025 11:30 PM
பாலக்காடு: கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட கூட்டம் நேற்று நடந்தது.
பாலக்காடு ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஹாலில்நடந்த கூட்டத்தை, இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பேச்சிமுத்து துவக்கி வைத்தார்.
மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இயக்க உறுப்பினர்களான வேலுசாமி, சுரேஷ், சரவணன், பொன்னுச்சாமி, சந்தரகலாதரன் ஆகியோர் பேசினர்.
தமிழ் பேசும் சிறுபான்மையினர் வசிக்கும் சித்தூர், பாலக்காடு மற்றும் அட்டப்பாடி தாலுகாக்களில் தற்போது வினியோகிக்கப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.,) தகவல் சேகரிப்பு படிவங்கள் தமிழில் அச்சிடப்பட வேண்டும்.
மொழியியல் சிறுபான்மையினர் பகுதிகளில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிட தமிழ் சிறுபான்மையினருக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும், என, வேண்டுகோள் விடுவிக்கப்பட்டது.

