/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடி மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற கூடாது: கூடலுாரில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : நவ 09, 2025 10:23 PM

கூடலுார்: 'முதுமலையிலிருந்து, மாற்றிட திட்டத்தில் பழங்குடி மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற கூடாது,' என, வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கிளைச் செயலாளர் காமாட்சி வரவேற்றார். கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். சென்னை ஐகோர்ட் மூத்த வக்கீல் மோகன், பழங்குடியினருக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான விபரம்:
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், வன உரிமை அங்கீகார சட்டத்திற்கு புறம்பாக, மாற்றிட திட்டத்தின் கீழ் முதுமலையிலிருந்து பழங்குடி உள்ளிட்ட மக்களை வெளியேற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அவர்களை விருப்பமான இடத்தில் குடியமர்த்த வேண்டும். பழங்குடியினருக்கு வழங்கிய நிதியில் நடந்த மோசடி தொடர்பான வழக்கை விரைந்து முடித்து, குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுமலையில் வசிக்கும் பழங்குடியினர், மவுண்டாடன் செட்டி மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற கூடாது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் போஜராஜ், பழங்குடி மக்கள் சங்க தலைவர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் முகமது கனி, கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகி எம்.குணசேகரன், முதுகுழி மறுவாழ்வு சங்கம் நிர்வாகிகள் சுரேஷ், தேவதாஸ், சிவதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வக்கீல் இர்சாத் அஹமது நன்றி கூறினார்.