ADDED : பிப் 23, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:தென் மாநிலங்களில், நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் குன்னுார் தேயிலை ஏல மையம், டீசர்வ், கோவை கொச்சி ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது.
நடப்பாண்டுக்கான, 7வது ஏலத்தில் தேயிலை துாளுக்கான சராசரி விலை உயர்ந்து உள்ளது. 'இலை மற்றும் டஸ்ட் ரகத்தில் குன்னுாரில், 93.19 ரூபாய்; டீசர்வ், 87.97 ரூபாய்; கோவை, 107.38 ரூபாய்; கொச்சி, 137.15 ரூபாய்,' என, தேயிலை கிலோவுக்கான சராசரி விலை இருந்தது.
ஆர்த்தோடக்ஸ் மற்றும் சி.டி.சி., ரகத்தில், 'குன்னுாரில், 92.12 ரூபாய்; டீசர்வ், 87.97 ரூபாய்; கோவை, 107.94 ரூபாய்; கொச்சி, 134.61 ரூபாய்,' என, சராசரி விலை இருந்தது. கடந்த, 6வது ஏலத்தை விட இந்த ஏலத்தில் ஒரு சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

