/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 1,185 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்
/
நீலகிரியில் 1,185 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்
நீலகிரியில் 1,185 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்
நீலகிரியில் 1,185 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை இயந்திரங்கள்: வேளாண் பொறியியல் துறை தகவல்
ADDED : ஆக 28, 2025 12:23 AM
குன்னுார்:
'நீலகிரியில், 1,185 விவசாயிகளுக்கு, 99 லட்சம் ரூபாய் மானியத்துடன், 1.89 கோடி மதிப்பீட்டிலான தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன,' என, வேளாண் பொறியியல் துறை தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை, காபி போன்ற தோட்ட பயிர்கள், 1,57,898.11 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. தேயிலை வாரியத்தில் பதிவு செய்த, 44,000 விவசாயிகள் தேயிலை பயிரிடுகின்றனர்.
தேயிலை விவசாயிகளுக்காக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்க திட்டத்தின் கீழ், நில தயாரிப்பு, விதைப்பு, பயிர் பாதுகாப்பு, அறுவடை, அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளுக்கு உதவும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு மண் பாதுகாப்பு, புதிய நீர்பாசன ஆதாரங்களை உருவாக்குதல், பாசனத்திற்காக தண்ணீரை இறைப்பதற்கு, சூரிய எரிசக்தி தொழில்நுட்பங்கள் ஏற்படுத்துதல் மற்றும் பம்ப்செட் மானியத்தில் வழங்கப்படுகிறது.
பசுந்தேயிலை பறிக்க, 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, பேட்டரியிலான தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. 2024-- 2025ம் ஆண்டில் வேளாண் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்க திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 70 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு, 40 சதவீதம் மானியத்திலும் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.
வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளர் செந்தில்குமார் கூறுகையில்,''நீலகிரியில் வேளாண் துறை சார்பில், 2023 முதல் 2025 வரை ஆதிதிராவிடர், பொது பிரிவினர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த, 1,185 விவசாயிகளுக்கு 1.89 கோடி மதிப்பீட்டில், 99 லட்சம் ரூபாய் மானியத்துடன் தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு இதுவரை, 50 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
மேலும், விவசாயிகள் அரசின் மானியங்களை பெற வேளாண் பொறியியல் துறையை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.