/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள்
/
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள்
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள்
தேயிலை தோட்டத்தில் சிறுத்தை அச்சத்தில் தோட்ட தொழிலாளர்கள்
ADDED : ஜன 26, 2025 11:05 PM

குன்னுார், ;குன்னுார் கம்பிச்சோலை பகுதியில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் அருகே உள்ள கம்பி சோலையில், தேயிலை தோட்டங்களில், கடந்த சில நாட்களாக குட்டியுடன் சிறுத்தை உலா வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக, வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
கண்காணித்த, கட்டபெட்டு வனச்சரக வனத்துறையினர், 'ஒரே இடத்தில் இல்லாமல் அவ்வப்போது அவை இடம் பெயரும் எனவும், இப்பகுதியில் மீண்டும் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் தேயிலை தோட்டங்களில் உலா வருவதால் தேயிலை பறிக்க தொழிலாளர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அருகில், சாலையோர பகுதிகளில் அதிகமாக உள்ள முட்புதர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இந்த புதர்களில் சிறுத்தைகள் மறைந்து இருந்தால், அவ்வழியாக செல்வோரை தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இங்குள்ள முட்புதர்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.