/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பனிப்பொழிவிலும் துளிர் விடும் தேயிலை
/
பனிப்பொழிவிலும் துளிர் விடும் தேயிலை
ADDED : ஜன 11, 2025 09:51 AM

ஊட்டி, : கேத்தி உட்பட சில கிராமப்புறங்களில் சில தேயிலை தோட்டங்கள் பசுமையுடன் காணப்படுகிறது.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் டிச ., முதல் வாரத்தில் உறைப்பனி தாக்கம் தென்பட்டது. தொடர்ந்து, அவ்வப்போது உறைப்பனி தென்பட்டு வருகிறது. 'இம்மாதம் இறுதி வரை உறைப்பனியின் தாக்கம் இருக்கும்,' என , கூறப்படுகிறது.
இதனால் ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில், 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை உள்ளது. உறைப்பனி தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், கேத்தி உட்பட சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. பசும் தேயிலை துளிர் விட துவங்கி உள்ளது.
இப்பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரிப்பதற்குள், விவசாயிகள் அறுவடைக்கு தயாரான இலைகளை அவசர, அவசரமாக கொள்முதல் செய்து தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்,'உறைப்பனியிலிருந்து தேயிலை தோட்டங்களை பாதுகாத்து கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சில பகுதிகளில் பனி பொழிவு அந்த அளவுக்கு தென்படாததால் தேயிலை தோட்டங்களில் இலைகள் துளிர்விட்டுள்ளது. அவற்றை அறுவடை செய்து வருகிறோம்,'என்றனர்