ADDED : அக் 18, 2026 06:36 PM

அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் கண்ணாடி, குடுவக்கோடு களம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீண். இவரது மனைவி ரஜிதா, 48. இவர் பாலக்காடு தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை ஸ்கூட்டரில் ரஜிதா குழல்மன்னம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கண்ணனுார் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே, அவரது ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, பாலக்காடு டவுன் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
