/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏ.சி., சீரமைத்த டெக்னீசியன் மாடியிலிருந்து விழுந்து பலி
/
ஏ.சி., சீரமைத்த டெக்னீசியன் மாடியிலிருந்து விழுந்து பலி
ஏ.சி., சீரமைத்த டெக்னீசியன் மாடியிலிருந்து விழுந்து பலி
ஏ.சி., சீரமைத்த டெக்னீசியன் மாடியிலிருந்து விழுந்து பலி
ADDED : ஜூலை 22, 2025 09:30 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஏ.சி., சீரமைத்த டெக்னீசியன், மாடியிலிருந்து கால் தவறி விழுந்து உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் காட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது அனஸ், 18. ஏ.சி., டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவர் நேற்று காலை பெருங்குளம் என்ற பகுதியில், ஒரு வீட்டில் மேல் மாடியில் பொருத்தியுள்ள ஏ.சி.,யை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, மாடியில் இருந்து கால் தவறி விழுந்தார்.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆலத்தூர் போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலத்தூர் தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.