/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜன 31, 2025 11:08 PM
ஊட்டி; ஊட்டியில், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ஊட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு, 4 வயதில் ஒரு மகள் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக, மனைவி தனது, 4 வயது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
குழந்தையின் எதிர்காலத்திற்கும், குடும்ப வறுமையை போக்கவும் முடிவெடுத்த சிறுமியின் தாயார் பணிக்கு சென்றார். சில நேரங்களில், பக்கத்து வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், 2019 ம் ஆண்டு டிச., 6ம் தேதி சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தாயார் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தார். பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ஊட்டி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், ' பக்கத்து வீட்டை சேர்ந்த, 20 வயது வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்,' என, தெரியவந்தது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்க, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார். இதை தொடர்ந்து, வாலிபர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.