/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காடு நெடுஞ்சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : மார் 21, 2025 10:06 PM

குன்னுார்; குன்னுார் - ஊட்டி நெடுஞ்சாலையில், மழையால் சாலையோரத்தில் ஏற்பட்ட பெரிய பள்ளம் சீரமைக்கப்பட்டது.
குன்னுாரில் கடந்த, 17ம் தேதி பெய்த கன மழையால், சாலையோரத்தில், பாதியில் நிறுத்தப்பட்ட விரிவாக்க பணிகளால், ஜல்லி கற்கள் அடித்து செல்லப்பட்டன. ஜல்லி கற்கள், சாலையின் நடுவே இருந்ததால், வாகனங்களை ஓட்டிய டிரைவர்கள் சிரமப்பட்டனர்.
இது தொடர்பாக, 19ல் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் சாலையின் நடுவே இருந்த கற்களை அகற்றினர். நேற்று தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், பொக்லைன் கொண்டு வரப்பட்டு, பெரிய பள்ளங்கள் மூடி தற்காலிக சீரமைப்பு பணி நடந்தது. மக்கள் கூறுகையில், 'கோடை வரும் என்பதால், இப்பகுதிகளில் தரமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.