/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி
/
சேதமடைந்த சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி
ADDED : மார் 18, 2025 05:19 AM

கூடலுார்: கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், ஊசிமலை -தொரப்பள்ளி இடையே சேதமடைந்த சாலையில் தற்காலிகமாக சீரமைப்பு பணி நடந்தது.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார் -ஊட்டி -மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையில், ஊட்டியிலிருந்து, ஊசிமலை வரையும்; தொரப்பள்ளி முதல் கக்கனல்லா வரை சீரமைக்கப்பட்டது.
ஆனால், இடைப்பட்ட ஊசிமலை -தொரப்பள்ளி வரையிலான சேதமடைந்த, 16 கி.மீ., துார சாலை சீரமைக்கவில்லை. 'சாலை சீரமைக்க திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு உத்தரவு கிடைத்த பின் பணிகள் துவங்கப்படும்,' என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனினும், இதுவரை சீரமைப்பு பணிகள் துவங்கத்தால் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இச்சாலையில் சேதமடைந்த பகுதியில் ஜல்லி கற்கள் கலவை மூலம் தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை நடந்தது சுற்றுலா பயணிகள், ஓட்டுநர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலை, சேதமடைந்த பகுதி தற்காலிகமாக சீரமைத்து இருப்பது, தற்காலிக தீர்வாகும். நிரந்தர தீர்வாக, பருவ மழைக்கு முன் சாலையை முழுமையாக தரமாக சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.