/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊராட்சியில் பதவி காலம் நிறைவு; வளர்ச்சி பணிகள் குறித்த புத்தகம் வெளியீடு

ADDED : டிச 23, 2024 10:30 PM

கூடலுார்; கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சியில், ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்து புத்தகம் வெளியிடப்பட்டது.
கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சியின் பதவிக்காலம், டிச., 31ல், நிறைவு பெறுகிறது. இதற்கான, நிறைவு விழா நிகழ்ச்சி, குங்கூர் மூலா பகுதியில் நடந்தது. கவுன்சிலர் ஸ்ரீஜா வரவேற்றார். விழாவுக்கு, ஊராட்சி தலைவர் சுனில் தலைமை வகித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் மூலம், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, ஊராட்சியில் ஐந்து ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்த புத்தகத்தை, கூடலுார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் வெளியிட்டார்.
முன்னாள் ஊராட்சி தலைவர்களை, ஊராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பணிகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.