/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை காலத்தில் பூத்து குலுங்கும் காபி பூக்கள் மழை தொடர்ந்தால் நறுமணம் வீசும்
/
கோடை காலத்தில் பூத்து குலுங்கும் காபி பூக்கள் மழை தொடர்ந்தால் நறுமணம் வீசும்
கோடை காலத்தில் பூத்து குலுங்கும் காபி பூக்கள் மழை தொடர்ந்தால் நறுமணம் வீசும்
கோடை காலத்தில் பூத்து குலுங்கும் காபி பூக்கள் மழை தொடர்ந்தால் நறுமணம் வீசும்
ADDED : மார் 18, 2025 05:09 AM

பந்தலுார் : நீலகிரி மாவட்டம் கூடலுார், பந்தலுார், குன்னுார் மற்றும் பழனி, வால்பாறை, தேனி உள்ளிட்ட பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டு உள்ளது.
காபி விவசாயத்தில், 35 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டு வருவதுடன், 14,112 பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். அதில், நீலகிரி மாவட்டத்தில், 8,333 ஏக்கர்; தேனியில் 3,758 ஏக்கர்; வால்பாறையில் 2,808 ஏக்கர் பரப்பளவில் காபி பயிரிடப்பட்டு உள்ளது.
ஒரு ஆண்டிற்கு, 20 ஆயிரம் மெட்ரிக் டன் காபி கொட்டைகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில், நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில், ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், இங்குள்ள நிலங்களில் காபி நல்ல விளைச்சலை தருகிறது.
நீலகிரியில் விளையும் காபி கொட்டைக்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட் உள்ளதால், அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. காபி விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கவும், காபி உற்பத்தியை அதிகரிக்கவும் கூடலுார் மற்றும் வயநாடு பகுதிகளில் காபி வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
தேயிலைக்கு போதிய விலை கிடைக்காதது, போதிய தொழிலாளர்கள் இல்லாதது போன்ற காரணங்களால், தேயிலை செடிகளை அகற்றி, காபி விவசாயத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் மாறி வருகின்றனர்.
ஆண்டிற்கு ஒரு முறை அறுவடை மற்றும் விவசாயத்திற்கு கூடுதல் செலவு ஏற்படாதது மற்றும் போதிய விலை கிடைப்பது போன்ற காரணங்கள் விவசாயிகளுக்கு, காபி விவசாயம் கை கொடுக்கிறது.
நடப்பாண்டு உலர வைக்கப்பட்ட காபி கொட்டை கிலோவிற்கு, 283 ரூபாய் வரை விலையாக கிடைத்து வந்த நிலையில், நேற்றைய மார்க்கெட்டில் கிலோ, 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் தற்போது காபி செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகிறது.
இந்த சூழ்நிலையில், கோடை மழை பெய்தால் மட்டுமே பூக்கள் காயாக மாறி, விவசாயிகளுக்கு மணம் வீசும்.
விவசாயி ஜோஸ் கூறுகையில், ''நடப்பாண்டு நல்ல விலை கிடைத்து வருவதால் காபி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
தற்போது பூக்கள் பூக்க தொடங்கி உள்ள நிலையில், கோடை மழை பெய்தால் மட்டுமே வரும் ஆண்டு காபி விளைச்சல் கை கொடுக்கும்,'' என்றார்.