/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலம் அமைக்கும் பணி: பூமி பூஜையுடன் துவக்கம்
/
பாலம் அமைக்கும் பணி: பூமி பூஜையுடன் துவக்கம்
ADDED : பிப் 09, 2024 11:17 PM

பந்தலுார்;பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட எருமாடு பகுதியில் இருந்து, வெட்டுவாடி, கொத்தலக்குண்டு வழியாக மாங்கோடு, அய்யயன் கொல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் சாலை அமைந்து உள்ளது.
அதில், கொத்தலக்குண்டு பகுதியில் ஆற்றை கடப்பதற்கு, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பாலம், மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டதால், மழை காலங்களில், ஆற்று வெள்ளம் பாலத்திற்கு மேல் சென்று வருகிறது.
இதனால், மழைக்காலம் முழுவதும் இந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் பல்வேறு சிரமப்பட்டனர். மேலும் பாலத்தின் அடிபாகம் உடைந்து, வலுவிழந்து காணப்படுகிறது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் புதிய பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கூடலுார் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சி சார்பில், 2 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில், பழைய பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டும் பணி நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.
சேரங்கோடு ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். முன்னாள் எம். எல்.ஏ., திராவிட மணி பணியை துவக்கி வைத்தார்.