/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் மக்கள் எதிர்பார்த்துள்ள நீதிமன்றம்; நீதிபதிகள் குழு ஆய்வு செய்ததால் மகிழ்ச்சி
/
மஞ்சூர் மக்கள் எதிர்பார்த்துள்ள நீதிமன்றம்; நீதிபதிகள் குழு ஆய்வு செய்ததால் மகிழ்ச்சி
மஞ்சூர் மக்கள் எதிர்பார்த்துள்ள நீதிமன்றம்; நீதிபதிகள் குழு ஆய்வு செய்ததால் மகிழ்ச்சி
மஞ்சூர் மக்கள் எதிர்பார்த்துள்ள நீதிமன்றம்; நீதிபதிகள் குழு ஆய்வு செய்ததால் மகிழ்ச்சி
ADDED : டிச 11, 2024 09:32 PM
மஞ்சூர்; மஞ்சூரில் நீதிமன்றம் அமைப்பதற்காக, நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குந்தா தாலுகா, 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுமக்களின் தொடர் வலியுறுத்தலால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சார்நிலை கருவூல அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தாலுகா அந்தஸ்து பெற்ற மஞ்சூரில் நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக, 'மஞ்சூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்,' என, பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஏற்கனவே, மஞ்சூரில் நீதிமன்றம் அமைப்பது குறித்து பல்வேறு இடங்களில் இடம் தேர்வு நடந்தது.
இந்நிலையில், ஐகோர்ட் நீதிபதிகள் சுரேஷ்குமார், சதீஷ்குமார், சக்திவேல் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிதரன், மகிளா கோர்ட் நீதிபதி செந்தில்குமார்,குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லிங்கம், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழினியன், உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகன கிருஷ்ணன் ஆகியோர், கடந்த வாரம் மஞ்சூர் பகுதியில் நீதிமன்றம் அமைவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். குறிப்பாக, குந்தா பாலம், முள்ளி மலைகண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
மஞ்சூரை சேர்ந்த சீனியர் வக்கீல் விஜயன் கூறுகையில்,''குந்தா வட்டம், மஞ்சூர் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்; உரிமையியல் நீதிமன்றம் அறிவிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகிறது. இது நாள் வரை நீதிமன்றம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. தற்போது, நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளனர். இதன் மூலம் விரைவில் மஞ்சூர் பகுதியில் நீதிமன்றத்திற்கான பணிகள் துவக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, இதனை மக்களும் வரவேற்றுள்ளனர்,'' என்றார்.

