/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதிய திட்டங்கள் வந்தாலும் குறையாத கூட்டம்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுவுடன் அணிவகுத்த பெண்கள்

ADDED : செப் 29, 2025 10:02 PM

ஊட்டி:
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொது மக்களின் மனுக்கள் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. அந்தந்த உள்ளாட்சிகளில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்து வருகின்றனர். அதன்படி, வாரந்தோறும் சராசரியாக, 200 மனுக்கள் வருகிறது.
புதிய திட்டம் இந்திலையில், மாவட்டத்தின் கடை கோடி மக்களுக்கும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் நடந்து வருகிறது.
இதில், நகர்ப்புற பகுதிகளில் நடக்கும் முகாம்களில், 13 துறைகள் 43 சேவைகள்; ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில், 15 துறைகள் 46 சேவைகள் மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மனுக்கள் சில வாரம் குறைந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களின் மனுக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் கூறுகையில்,'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக அளிக்கப்படும் மனு க்களின் பல மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதில்லை. பல ஆண்டுகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அந்த முகாம்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், குறை தீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம். என்றனர்.