/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடி மக்களுடன் நடனமாடிய கவர்னர்
/
பழங்குடி மக்களுடன் நடனமாடிய கவர்னர்
ADDED : பிப் 16, 2024 01:17 PM

ஊட்டி: 3 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ள கவர்னர் ரவி, பழங்குடி மக்களுடன் நடனமாடினார்.
மூன்று நாள் பயணமாக கவர்னர் ரவி நேற்று(பிப்.,15) மாலை ஊட்டி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம், மதியம், 2:30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார். பின், சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை 6:15 மணிக்கு வந்தடைந்தார். கலெக்டர் அருணா, எஸ்.பி., சுந்தரவடிவேல் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.
இன்று ஊட்டி தோடர் ஆதிவாசி கிராமமான முத்தநாடு மந்துவுக்கு, ரவி வந்தார். அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்ட அவர், கோவில் வரலாறு, கலாசாரம் குறித்து கேட்டறிந்தார். பிறகு, தோடர் மக்களுடன் கலந்துரையாடிய கவர்னர், அவர்களுடன் இணைந்து நடனமாடினார். தோடர் மக்கள், தங்களது கலாச்சார முறைபடி, கவர்னருக்கு வரவேற்பு அளித்தனர்.