/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லாததால் பாதிப்பு
/
வேகத்தடையில் வெள்ளை கோடு இல்லாததால் பாதிப்பு
ADDED : ஜன 17, 2025 11:30 PM

கோத்தகிரி; கோத்தகிரி-கட்டபெட்டு இடையே, சாலை வேகத்தடையில் வெள்ளைக்கோடு வரையாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி கட்டபெட்டு வழியாக, குன்னுார், ஊட்டி உட்பட, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்கள் உட்பட தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இச்சாலை, மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜனாதிபதி வருகைக்காக, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அகற்றப்பட்டது. 'வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, தற்போது வேகத்தடை அமைக்கப்படுள்ளது. ஆனால், வெள்ளைக்கோடு வர்ணம் பூசாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் சென்றுவரும் போது, வேகத்தடை தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, விபத்து ஏற்படாமல் தவிர்க்க, வேகத்தடையில், வெள்ளைக் கோடு வர்ணம் பூச நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.