/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடப்பாண்டின் கடைசி ஏலம் ரூ.18.38 கோடி வருவாய்
/
நடப்பாண்டின் கடைசி ஏலம் ரூ.18.38 கோடி வருவாய்
ADDED : டிச 29, 2025 06:23 AM
குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடப்பாண்டின் கடைசி ஏலமான, 52வது ஏலம் நடந்தது.
அதில், '14.76 லட்சம் கிலோ இலை ரகம், 3.74 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 18.50 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '12.11 லட்சம் கிலோ இலை ரகம், 3.06 லட்சம் டஸ்ட்ரகம்,' என, 15.17 லட்சம் கிலோ விற்பனையானது 'சராசரி விலை கிலோவிற்கு, 112.77 ரூபாய்,' என, இருந்தது. மொத்த வருமானம், 17.13 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை கிலோவிற்கு 1.40 பைசா குறைந்தது. கடந்த, 51வது ஏலத்தை ஒப்பிடுகையில், 2.31 லட்சம் கிலோ வரத்து, 2.75 லட்சம் கிலோ விற்பனை உயர்ந்தது. 2.95 கோடி ரூபாய் மொத்த வருவாய் அதிகரித்தது.
டீசர்வ் ஏலம் குன்னுார் டீசர்வ் மையத்தில் நடந்த ஏலத்திற்கு, 1.23 லட்சம் கிலோ வந்ததில், 1.22 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவுக்கு, 102.34 ரூபாயாக இருந்தது. 1.25 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த, 51வது ஏலத்தை ஒப்பிடுகையில், 48 ஆயிரத்து 450 கிலோ விற்பனை அதிகரித்தது. 46 ஆயிரத்து 880 கிலோ கூடுதலாக விற்பனையானது. வருமானம், 46 லட்சம் ரூபாய் கூடுதலானது. கோவை மற்றும் கொச்சி ஏல மையங்களில், 52 வது ஏலம் நடத்தப்படவில்லை.

