மாணவர்களின் தலைமை பண்பு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்
மாணவர்களின் தலைமை பண்பு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்
UPDATED : அக் 13, 2026 12:00 AM
ADDED : அக் 12, 2026 09:14 PM
ஊட்டி:ஊட்டியில் மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்க ஏதுவாக,'ஆட்சியருடன் காபி' நிகழ்ச்சி நடந்தது. தலைமை வகித்த கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது:
மாணவர்கள் கல்வி முன்னேற்றம், தலைமை பண்பு, தனிநபர் வளர்ச்சி குறித்து பயனுள்ள வழிகாட்டுதல், சிந்தனைத் திறன், கல்வி மேம்பாடு ஆகிய மாதிரி தேர்வுகளில் பங்கேற்ற வேண்டும்.
எதிர்கால இலக்குகளை தெளிவாக அறிந்து, அவற்றில் உள்ள சவால்களை எதிர்கொள்ள மாற்றுத்திட்டத்தை தயாராக வைத்து கொள்ள வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, தன் நம்பிக்கை, தலைமை பண்பு, குழுவாக செயல்படும் திறன் மற்றும் விளையாட்டு பண்பை வளர்த்து கொள்ள வேண்டும். இதனால், எதிர்காலம் சிறப்பாகும்.
சமூக பொறுப்பு தொடர்பாக, மாணவர்கள் பள்ளி செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும், பகிர்ந்து பள்ளி மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
