தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/யு.பி.ஐ., பணம் பரிவர்த்தனை அறிவிப்பு வணிகர் சங்கம் கண்டனம் ஆர்ப்பாட்டம்

யு.பி.ஐ., பணம் பரிவர்த்தனை அறிவிப்பு வணிகர் சங்கம் கண்டனம் ஆர்ப்பாட்டம்

யு.பி.ஐ., பணம் பரிவர்த்தனை அறிவிப்பு வணிகர் சங்கம் கண்டனம் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 13, 2026 12:00 AM

ADDED : அக் 12, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 12:00 AM ADDED : அக் 12, 2026 07:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

–நிருபர் குழு–: ‘மத்திய அரசு, யு.பி.ஐ., சேவைக்கு அக்., 15ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்,’ என, அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, வியாபாரிகளையும், பொதுமக்களையும் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி, நேற்று ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், குந்தா உட்பட மாவட்டம் முழுவதும், நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.

ஊட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில இணை செயலாளர் ராஜ முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குலசேகரன் வரவேற்றார். கவுரவ தலைவர்கள் ஜெயராமன், சாதிக் அலி, ஜவகர்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட தலைவர் முகமது பாரூக் , மாநில துணைத் தலைவர் தாமஸ் , இணை செயலாளர் அப்துல் ரசாக் பங்கேற்று பேசினர். மாவட்ட துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us