UPDATED : அக் 13, 2026 12:00 AM
ADDED : அக் 12, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி:
கோத்தகிரி அரசு மருத்துவமனையில், தனியார் வாயிலாக, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பலர், ஆறு மாதங்களாக பணிப்புரிந்து வருகின்றனர்.
பணியில் சேரும் போது, ‘21 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்,’ என, தெரிவித்த நிலையில், தற்போது, 14 ஆயிரம் ரூபாய் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது. தவிர,'பே சில்ப் ' கூட காட்டுவதில்லை. இந்நிலையில், ‘சம்பளம் உயர்த்தி தருவதுடன், அனைவரையும் மாற்று பணியமர்த்த கூடாது,’ கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில், குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
