தீப்பிடித்து எரிந்த லாரி டயர்: பெரும் விபத்து தவிர்ப்பு
தீப்பிடித்து எரிந்த லாரி டயர்: பெரும் விபத்து தவிர்ப்பு
UPDATED : அக் 12, 2026 06:59 PM
ADDED : அக் 12, 2026 06:48 PM
கூடலுார்: கூடலுாரில் பருப்பு ஏற்றி வந்த லாரியின், டயரில் ஏற்பட்ட தீ, விரைந்து கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னையில் இருந்து, கூடலுாருக்கு பருப்பு லோடு ஏற்றி வந்த லாரி, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு கூடலுார் வந்தடைந்தது. லாரியை ஓட்டுனர் பரத் ஒட்டி வந்தார். இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்ட், சிக்னல் அருகே, லாரியின் முன் டயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மக்கள் சப்தமிட, ஓட்டுனர் லாரியை நிறுத்தி இறங்கினார்.
பணியில் இருந்த போக்குவரத்து எஸ்.ஜ.,கள் கிறிஸ்டிராஜ், வாசு மற்றும் ஹோட்டல் ஊழியகள், ஹோட்டல்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீர் பாய்ச்சி அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
