/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தெங்குமரஹாடா கிராமத்தில் இருளை நீக்கிய ஒளி 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : நவ 10, 2025 11:39 PM

கோத்தகிரி: கோத்தகிரி தெங்குமரஹாடா கிராமத்திற்கு மின் 'சப்ளை' வழங்கப்பட்டது.
கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா சுற்றுவட்டார கிராமங்களுக்கு, கடந்த, 20 நாட்களுக்கு மேலாக, சரிவர மின்சப்ளை வழங்காததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு, மின் சப்ளை இல்லாததால், கைரேகை வைக்க முடியாமலும், மாயாறு ஆற்றில் இருந்து, மோட்டார் மூலம் தண்ணீர் வினியோகிக்க முடியாமலும் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, மின்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்த சிறப்பு குழு பகுதியை ஆய்வு செய்து, மின் சப்ளைக்கு தேவையான புதிய உபகரணங்களை பொருத்தி, மின் பாதையில் உள்ள மரக்கிளைகளை அகற்றி, புதிய ஒயர்கள் மூலம் மின்சப்ளை வழங்கினர். இதனால், அப்பகுதியில் பல நாட்கள் நிலவிய மின்சார பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், 'தற்போது தெங்குமரஹாடா கிராமத்திற்கு, ஒருங்கிணைந்த சிறப்பு குழு சார்பில், சீரான மின்சாரம் வழங்கப்பட்டு, சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது,'' என்றார்.