/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேனீக்கள் கொட்டியதில் ஆறு பேர் காயம்
/
தேனீக்கள் கொட்டியதில் ஆறு பேர் காயம்
ADDED : நவ 10, 2025 11:39 PM

குன்னுார்: குன்னுார் வண்டிச்சோலை வனத்துறை நர்சரியில், கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதில் ஆறு பேர் காயம் அடைந்தனர்.
குன்னுார் வண்டிச்சோலை அருகே வனத்துறையின் நர்சரியில், மர நாற்றுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை, 11:00 மணியளவில் இப்பகுதியில் இருந்த தேன் கூடு கலைந்தது. அதில், வாட்சர் தவமணி,55, மீது தேனீக்கள் சூழ்ந்து கொட்டியதில், கீழே விழுந்துள்ளார்.
இவரை காப்பாற்ற வந்த மற்றும் அருகில் பணியாற்றி கொண்டிருந்த வாட்சர் நந்தினி, 40, தற்காலிக பணியாளர்கள் உஷா, 37, சுசீலா, 41, ரஞ்சினி, 28, புவனேஸ்வரி, 48 ஆகியோரையும் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தனர்.
ஆறு பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக, தவமணி ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குன்னுார் வனத்துறையினர் ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

