/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அழிவின் பட்டியலில் உள்ள அரிவாள் மூக்கன் பறவைகள்: வயல் வெளியில் காணப்பட்டதால் மகிழ்ச்சி
/
அழிவின் பட்டியலில் உள்ள அரிவாள் மூக்கன் பறவைகள்: வயல் வெளியில் காணப்பட்டதால் மகிழ்ச்சி
அழிவின் பட்டியலில் உள்ள அரிவாள் மூக்கன் பறவைகள்: வயல் வெளியில் காணப்பட்டதால் மகிழ்ச்சி
அழிவின் பட்டியலில் உள்ள அரிவாள் மூக்கன் பறவைகள்: வயல் வெளியில் காணப்பட்டதால் மகிழ்ச்சி
ADDED : நவ 10, 2025 11:41 PM

பந்தலுார்: அழிவு பட்டியலில் உள்ள அரிவாள் மூக்கன் பறவைகள், பந்தலூர் வயல்வெளிகளில் காணப்படுவதால், பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை பறவைகள் காணப்படுகின்றன. அதில், 'த்ரெஷ்கியார்னிஸ்'என்ற அறிவியல் பெயரை கொண்ட வெள்ளை அரிவாள் மூக்கன், பறவைகள் கடந்த காலங்களில் அதிக அளவில் காணப்பட்டது.
இவைகள் சிறு கூட்டம் அல்லது பெரும் கூட்டமாக, அறுவடைக்கு தயார் செய்யும் வயல்வெளிகள் அல்லது அறுவடைக்குப் பின்னர் ஈரமான நிலையில் உள்ள நெல் வயல்களில் அதிக அளவில் காணப்படும். இவை நீர் நிலைகளான ஏரி, குளம்,குட்டை போன்ற பகுதிகளை ஒட்டிய மரங்களில், கூடு கட்டி வாழும் தன்மை கொண்டது.
இந்த பறவைகள் நவ., முதல் பிப்., வரை, அடைகாக்கும் தன்மை கொண்டவை. வயல் வெளிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரிப்பால், இந்த பறவைகள் அழிந்து தற்போது அழிவின் பட்டியலில் உள்ளன.
பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனத்தின், பட்டியலில் இந்த பறவை, அழியக்கூடிய பறவையாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்தகைய அரிய வகை பறவைகள் பந்தலுார் பகுதியில் உள்ள வயல்வெளிகளில், காலை நேரங்களில் காணப்படுவது, பறவைகள் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயற்கை ஆர்வலர் அம்சா கூறுகையில், ''தற்போது பெரும்பாலான பறவைகள் அழிவின் பட்டியலில் தான் உள்ளன. அதில் இந்த பறவையும் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
வயல்வெளிகளில் உள்ள சிறு பிராணிகளை உண்டு வாழும், இதுபோன்ற பறவைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து, இயற்கை விவசாயத்தால், இது போன்ற பறவைகளை பாதுகாக்க வேண்டியதும் அவசியம் ஆகும்,'' என்றார்.

