/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருளில் தொகுப்பு வீடுகள் வெளிச்சத்துக்கு ஏக்கம்: தீர்வு காணுமா மாவட்ட நிர்வாகம்?
/
இருளில் தொகுப்பு வீடுகள் வெளிச்சத்துக்கு ஏக்கம்: தீர்வு காணுமா மாவட்ட நிர்வாகம்?
இருளில் தொகுப்பு வீடுகள் வெளிச்சத்துக்கு ஏக்கம்: தீர்வு காணுமா மாவட்ட நிர்வாகம்?
இருளில் தொகுப்பு வீடுகள் வெளிச்சத்துக்கு ஏக்கம்: தீர்வு காணுமா மாவட்ட நிர்வாகம்?
ADDED : நவ 10, 2025 11:41 PM

ஊட்டி: 'மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தராததால். இருள் சூழ்ந்த கிராமத்தில் வன விலங்குகளுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம்,' என, பழங்குடியினர் தெரிவித்தனர்.
ஊட்டி மசினகுடி அருகே, சிறியூர் கிராமத்தில், இருளர், குரும்பர் என, 70 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டு காலம் வசித்து வரும் இப்பகுதி மக்கள் தொகுப்பு வீடு கட்டி தர கோரி, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்கப்பட்டு, கூக்கல்தொரை ஊராட்சி வாயிலாக தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. மக்களும் தொகுப்பு வீடுகளில் குடியேறினர். பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மின் இணைப்புக்கான நடவடிக்கைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பல முறை அணுகி முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருள் சூழ்ந்த நிலையில், விஷ ஜந்துக்களின் தொல்லைக்கு மத்தியில் மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, யானை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் பொழுதை கழிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கிராம மக்கள் கூறுகையில்,'புதிதாக கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பல மாதங்களாக மின் இணைப்பு கிடைக்கவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தராததால் வன விலங்குகளுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். கிராம மக்களின் நலன் கருதி விரைவில் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி தர கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்,' என்றனர்.

