/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கனரக வாகனங்களில் பாதுகாப்பு இன்றி பாரம் ஏற்றி செல்வதால் பாதிப்பு
/
கனரக வாகனங்களில் பாதுகாப்பு இன்றி பாரம் ஏற்றி செல்வதால் பாதிப்பு
கனரக வாகனங்களில் பாதுகாப்பு இன்றி பாரம் ஏற்றி செல்வதால் பாதிப்பு
கனரக வாகனங்களில் பாதுகாப்பு இன்றி பாரம் ஏற்றி செல்வதால் பாதிப்பு
ADDED : நவ 11, 2025 10:08 PM

கூடலுார்: 'கூடலுார் வழியாக கனரக வாகனங்களில் பாதுகாப்பு இன்றி அதிக பாரம் ஏற்றி செல்வதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் சாலை, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில வாகன போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. இதன் காரணமாக, இச்சாலையில் உள்ளூர் மற்றும் இன்றி வெளி மாநில வாகன போக்குவரத்தும் அதிகமாக காணப்படுகிறது.
வெளியூர்களில் இருந்து, கூடலுார் மற்றும் இன்றி, கேரளா - கர்நாடக இடையே அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்கின்றன.
அதில், கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு, 50 டன்னுக்கு அதிகமாக எடை கொண்ட வாகனங்களும் இவ்வழியாக சென்று வருகின்றன.
சமவெளி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து கூடலுாரில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களில் அதிக உயரத்தில், கூடுதல் எடையுடன் பாதுகாப்பின்றி விறகு ஏற்றி செல்கின்றனர்.
இந்த வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்ற வாகனங்களால், மக்கள் சாலையோரம் நடக்க கூட அச்சமடைந்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுார் வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில், சில வாகனங்கள், பாதுகாப்பற்ற முறையில் பாரம் ஏற்றி செல்கின்றன. இவைகளால் விபத்துகள் ஆபத்தும் உள்ளது. இதனால் மக்கள், அச்சத்துடன் சாலையோரம் நடந்து செல்கின்றனர். ஆய்வு செய்து தடுக்க வேண்டும்,' என்றனர்.

