/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் உலா வந்த எருமை விவகாரம்; ஊழியர்களுக்கு 'ஆப்சென்ட்' போட்ட நிர்வாகம் தோடரின ஊழியர்களுக்கு 'ஆப்சென்ட்' போட்ட நிர்வாகம்

ADDED : நவ 19, 2025 04:27 AM

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் வளர்ப்பு எருமைகள் உலா வந்த விவகாரத்தில், தோடரின பூங்கா ஊழியர்களுக்கு 'ஆப்சென்ட்' போட்டது குறித்து, ஆர்.டி.ஓ., விடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், இத்தாலியன் கார்டன் பல வண்ண மலர்கள் உள்ளன. இதனை பார்வையிட சுற்றுலா பயணியர் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பூங்காவை ஒட்டியுள்ள கார்டன் மந்து பகுதியிலிருந்து வெளியேறும் வளர்ப்பு எருமைகள் சில நேரங்களில் பூங்காவில் உலா வருவதால் பாதிப்பு ஏற்படுகிது. இதனை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் தோடர் பழங்குடியினரிடம் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கார்டன் மந்தில் நேற்று நடந்த எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, ஆர்.டி.ஒ., டினு அரவிந்திடம், தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் தோடர் பழங்குடி ஊழியர்கள் கூறுகையில்,' பூங்காவில், எருமை உலா வந்ததால், அங்கு பணிபுரியும் பழங்குடியினர், 10 பேருக்கு பூங்கா அதிகாரி 'ஆப்சென்ட்' போட்டுள்ளார். மந்து அருகே, பல கற்பூர மரங்களை வெட்டிய போது வேலி உடைந்துள்ளது. அதனை சரிசெய்யாமல், எங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்,' என்றனர். இது குறித்த விசாரிப்பதாக ஆர்.டி.ஓ., உறுதி அளித்தார்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் பீபிதா கூறுகையில்,''பூங்காவை ஒட்டியுள்ள மந்திலிருந்து வளர்ப்பு எருமைகள், பூங்காவில் நுழைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததால் சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து தடுக்க கோரினோம். மேலும், மந்து பகுதியை சேர்ந்த சிலர் பூங்காவில் பணிபுரிகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என்றார்.