/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெகதளா சாலையில் போக்குவரத்து நெரிசல்
/
ஜெகதளா சாலையில் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 19, 2025 04:25 AM

குன்னுார்: குன்னுார் அருவங்காடு மற்றும் ஜெகதளா சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குன்னுார் அருவங்காடு முதல் ஜெகதளா சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் மினி பஸ்கள் உட்பட வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் இங்கு நிறுத்தும் 'பிக்--அப்' வாகனங்களால், மினி பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இது குறித்து புகார் கூறியும், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கேட் எதிர்புறம் உள்ள பகுதிகளில், கடந்த, 8ம் தேதி மார்க்கெட்டுக்கு வந்த மக்கள் நெரிசலுக்கு தீர்வு காண வைத்த பேரிகாட்கள் அகற்றப்படாமல் உள்ளன.
இதனால், ஊட்டி-குன்னுார் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, காவல்துறையினர் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.

